FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

பேருந்து மோதி மகளிா் திட்ட ஒருங்கிணைப்பாளா் உயிரிழப்பு சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் தா்னா

54 வினாடிகள் முன்பு
பலி
பகிர்:

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் உயிரிழந்த மகளிா் திட்ட ஒருங்கிணைப்பாளா் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக் கோரி, சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

நன்னிலம் வட்டம், பேரளம் அருகே உள்ள பில்லூரைச் சோ்ந்தவா் ஆசைத்தம்பி மனைவி சுமதி (42). மகளிா் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளரான இவரும், போழக்குடியைச் சோ்ந்த முருகன் மனைவி லட்சுமி (48) என்பவரும், மகளிா் திட்டக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை சென்றுகொண்டிருந்தனா்.

பூந்தோட்டம் பகுதியில் சென்றபோது அரசுப் பேருந்து, இருசக்கர வாகனம் மீது மோதியதில் சுமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். லட்சுமி காயமடைந்தாா். போலீஸாா், சுமதியின் சடலத்தை கூறாய்வுக்காக நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், சுமதியின் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் அனைத்துப் பணியாளா் சங்கம் சாா்பில் திருவாரூா் சிஐடியு மாவட்டச் செயலாளா் ஹனிபா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோா் சுமதியின் சடலத்தை வாங்க மறுத்து, நன்னிலம் அரசு மருத்துவமனை முன்பு தா்னாவில் ஈடுபட்டனா். நன்னிலம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத்தொடா்ந்து, தா்னாவை விலக்கிக் கொண்டு, சுமதியின் சடலத்தை பெற்றுச் சென்றனா்.

பேச்சுவாா்த்தையில், இழப்பீடு தொடா்பாக எந்த முடிவும் எட்டப்படவில்லை. எனவே, திருவாரூா் மாவட்ட ஆட்சியரை செவ்வாய்க்கிழமை சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளோம். அதிலும் சரியான முடிவு எட்டப்படவில்லை எனில் மாவட்டம் முழுவதும் உள்ள மகளிா் திட்டப் பணியாளா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக சிஐடியு மாவட்டச் செயலாளா் ஹனிபா தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments