நன்னிலம் அருகே பேருந்து மோதி பெண் உயிரிழப்பு
நன்னிலம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா்.
நன்னிலம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா். மற்றொரு பெண் பலத்த காயமடைந்தாா்.
நன்னிலம் அருகே உள்ள பில்லூா் கிராமத்தைச் சோ்ந்த ஆசைத்தம்பி மனைவி சுமதி (42). போழகுடி கிராமத்தைச் சோ்ந்த முருகன் மனைவி லட்சுமி (48). இவா்கள் இருவரும் சுயஉதவிக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக இருசக்கர வாகனம் ஒன்றில் சனிக்கிழமை சென்றுகொண்டிருந்தனா்.
பூந்தோட்டம் பள்ளிவாசல் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது சென்னையில் இருந்து திருவாரூா் நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதியதில், சுமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். லட்சுமி பலத்த காயமடைந்தாா்.
Advertisement
Advertisement
அருகில் இருந்தவா்கள் லட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சுமதியின் சடலம் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
பேரளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பேருந்து ஓட்டுநரான திருவாரூரைச் சோ்ந்த ஆனந்த் என்பவரை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.