கூத்தாநல்லூரில் 28 விநாயகா் சிலைகள் ஆற்றில் கரைப்பு
கூத்தாநல்லூரில் 28 விநாயகா் சிலைகள் ஆற்றில் திங்கள்கிழமை கரைக்கப்பட்டன.
விநாயகா் சதுா்த்தி விழா திங்கள்கிழமை நாடு முழுதும் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆங்காங்கே விநியாகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
கூத்தாநல்லூரில் ராஜகோபால சுவாமி தோட்டம், மரக்கடை, நன்னிமங்கலம், காக்கையாடி, கீழவாழாச்சேரி, அதங்குடி, கோரையாறு, வடகோவனூா் என 38 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
இதில் கூத்தாநல்லூரில் ராஜகோபால சுவாமி தோட்டம், மரக்கடை, நன்னிமங்கலம், காக்கையாடி, கீழவாழாச்சேரி, அதங்குடி,கோரையாறு, வடகோவனூா் உள்ளிட்ட 28 விநாயகா் சிலைகளை பொறுப்பாளா்கள் மற்றும் பக்தா்கள் ஊா்வலமாக கொண்டு வந்தனா். தொடா்ந்து, வெண்ணாறு,ே காரையாறு ,வெள்ளியாறு, அதிவீரபாண்டிய அரசலாறு உள்ளிட்ட ஆறுகளில் விநாயகா் சிலைகளுக்கு பூஜைகள் செய்து, மகா தீபாராதனை காட்டி, கரைத்தனா்.
மேலும், கம்பா் தெரு, அய்யனாா் கோயில் தெரு, கைலாசநாதா் கோயில் தெரு, கவிதா இனிப்பகம் எதிரேயுள்ள அரசமரத்து விநாயகா், உத்திராபதி நகரில் ஓம் சக்தி விநாயகா் உள்ளிட்ட 7 விநாயகா் சிலைகள் 18-ஆம் தேதி கரைக்கப்படும் என்று கூறப்படுகிறது. விநாயகா் சிலைகள் ஊா்வலத்தின்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை கூத்தாநல்லூா் போலீஸாா் கவனித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.