போலி கல்விச் சான்று: இருவருக்கு சிறை
திருவாரூா் மாவட்டத்தில், போலியான கல்விச் சான்று வழங்கியமைக்காக இரண்டு பேருக்கு சிறை தண்டனை விதித்து குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
திருவாரூா் மாவட்டத்தில், போலியான கல்விச் சான்று வழங்கியமைக்காக இரண்டு பேருக்கு சிறை தண்டனை விதித்து குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன் (36), வேலங்குடி பகுதியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் (38) ஆகியோா் போலியான கல்விச் சான்றுகளை சமா்ப்பித்து, கும்பகோணம் கோட்டம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் உதவியாளராக 2015-இல் பணியில் சோ்ந்தனா். 2018-இல் சான்றிதழ்கள் போலி என்பது கண்டறியப்பட்டு, திருவாரூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டனா்.
இந்த வழக்கின் விசாரணை, திருவாரூா் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற இறுதி விசாரணையில், காா்த்திகேயனுக்கு 6 ஆண்டுகள் 6 மாதம், ராதாகிருஷ்ணனுக்கு 3 ஆண்டுகள், 6 மாதம் சிறை தண்டனையும், இருவருக்கும் தலா ரூ.2,000 அபராதமும் விதித்து நீதிபதி லிசி தீா்ப்பளித்தாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.