FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மோரி கேட்: தனியார் குடோனில் தீ விபத்து: ஒருவர் பலி

வடக்கு தில்லி, மோரி கேட் பகுதியில் தனியார் குடோனில் புதன்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

வடக்கு தில்லி, மோரி கேட் பகுதியில் தனியார் குடோனில் புதன்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இது குறித்து தில்லி காவல் துறையினர் வியாழக்கிழமை கூறியதாவது: 
தில்லி மோரி கேட் பகுதியில் உள்ள ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் குடோனில் புதன்கிழமை இரவு தீவிபத்து ஏற்பட்டது. இதில், ராஜேந்தர் (40) என்பவர் தீ காயமடைந்து உயிரிழந்தார். யோகேஷ் (24) என்பவர் படுகாயமடைந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக குடோனின் உரிமையாளர் யோகேஷ் கைது செய்யப்பட்டார். 
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையின உயர் அதிகாரி கூறியதாவது: 
மோரி கேட் பகுதியில் உள்ள ஒரு குடோனில் தீ விபத்து நிகழ்ந்ததாக தீயணைப்புத் துறைக்கு புதன்கிழமை இரவு 8.50 மணிக்கு தகவல் வந்தது. 
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டு தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இரவு 10 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது' என்றார்.
தில்லி காவல் துறையின் வடக்குச் சரக துணை ஆணையர் நுபுர் பிரசாத் கூறுகையில், "குடோனின் தரைத் தளத்தில் தீவிபத்து ஏற்பட்டது. அங்கு பற்றவைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் பலத்த காயமடைந்தனர். அவர்களில் ராஜேந்தர் சிகிச்சையில் இருந்த போது உயிரிழந்தார். யோகேஷ் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments