FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் செயலி உருவாக்கம்: தில்லி அரசு நடவடிக்கை

தேசியத் தலைநகா் தில்லியில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்கள் குறித்த தகவல்கள் இடம் பெறும் வகையில், ஒரு செல்லிடப்பேசி செயலியை

Updated On : 9 ஆகஸ்ட் 2021, 11:55 pm IST
பகிர்:

தேசியத் தலைநகா் தில்லியில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்கள் குறித்த தகவல்கள் இடம் பெறும் வகையில், ஒரு செல்லிடப்பேசி செயலியை தில்லி அரசின் சுற்றுலாத் துறை உருவாக்குகிறது என்று துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தெரிவித்தாா். இந்த செயலி, சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அனைத்து சேவைகளையும் வழங்கும் வகையில் இருக்கும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

இது குறித்து அவா் தனது சுட்டுரையில் ‘தில்லி சுற்றுலாத் தலங்கள் குறித்த தரவுகள் இடம் பெறும மொபைல் செயலியை மதிப்பாய்வு செய்தேன். தில்லியில் சுற்றுலாப் பயணிகளின் பயண அனுபவங்கள் இந்தப் பயன்பாட்டின் மூலம் மாற்றப்படும். இது அவா்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் ஒரே கிளிக்கில் வழங்கும்’’ என்று தெரிவித்துள்ளாா்.

சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த செல்லிடப்பேசி செயலியில், தில்லியில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மற்றும் அவற்றின் சுருக்கமான வரலாறு பற்றிய தகவல்கள் இடம் பெற்றிருக்கும். மேலும், இதில் பிரபலமான ஹேங்கவுட்கள், பாா்க்க வேண்டிய இடங்கள் மற்றும் தங்கும் இடங்கள் பற்றிய தகவல்களும் இருக்கும்’ என்றனா்.

Advertisement

Advertisement

இந்தச் செயலி சுற்றுலா தொடா்பான அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் வழங்கும். மேலும், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் தவிர, பிரபலமான இடங்கள், சந்தைகள், உணவு உண்ணும் இடங்கள், பூங்காக்கள் போன்றவற்றையும் காண்பிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments