தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை உயா்வு! அடுத்த சில நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை!
தில்லியின் அதிகபட்ச வெப்பநிலை சனிக்கிழமையன்று உயா்ந்தது.
தில்லியின் அதிகபட்ச வெப்பநிலை சனிக்கிழமையன்று உயா்ந்தது. அடுத்த சில நாள்களுக்கு மேகமூட்டமான வானம் நிலவும் என்றும், குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு இருக்காது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்தது.
நகரின் வானிலையைக் காட்டும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு நிலையத்தில், அதிகபட்ச வெப்பநிலை 35.7 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது இயல்பை விட 0.2 டிகிரி அதிகமாகவும், வெள்ளிக்கிழமையை விட 2.4 டிகிரி அதிகமாகவும் இருந்தது.
குறைந்தபட்ச வெப்பநிலையும் சிறிதளவு அதிகரித்து 26.6 டிகிரி செல்சியஸாக இருந்தது. இது இயல்பை விட 0.7 டிகிரி குறைவாகவும், முந்தைய நாளை விட 0.8 டிகிரி அதிகமாகவும் இருந்தது.
Advertisement
Advertisement
லோதி சாலையில் அதிகபட்ச வெப்பநிலை 35.8 டிகிரி செல்சியஸாகப் பதிவானது, இது முந்தைய நாளை விட 2.6 டிகிரி அதிகமாகும். அதே நேரத்தில், குறைந்தபட்ச வெப்பநிலை 26.2 டிகிரி செல்சியஸாகப் பதிவானது, இது வெள்ளிக்கிழமையை விட 0.5 டிகிரி அதிகமாகும்.
ரிட்ஜ் மற்றும் ஆயாநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 23.5 டிகிரி மற்றும் 26 டிகிரி செல்சியஸாகப் பதிவானது, இது வெள்ளிக்கிழமையை விட முறையே 0.6 மற்றும் 1.4 டிகிரி குறைவாகும்.
வரும் நாள்களுக்கு மழை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை, அதே நேரத்தில் தேசிய தலைநகரில் சனிக்கிழமை நாள் முழுவதும் மழையின்றி காணப்பட்டது.
‘அடுத்த சில நாள்களுக்கு பெரும்பாலும் மேகமூட்டமான வானிலை நிலவும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்று இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இதற்கிடையில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, சனிக்கிழமையன்று நகரின் காற்றின் தரக் குறியீடு மிதமான பிரிவுக்கு சென்று மோசமடைந்தது.
வெள்ளிக்கிழமை இதே நேரத்தில் 65 புள்ளிகள் (திருப்திகரமானது) எனப் பதிவாகி இருந்தது. 24 மணி நேர சராசரி உடன் ஒப்பிடுகையில், சனிக்கிழமை மாலை 4 மணிக்கு 24 மணி நேர சராசரி 140 புள்ளிகளாகப் (மிதமானது) பதிவாகி இருந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.