FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

யமுனையில் அடித்துச் செல்லப்பட்ட இரு சிறுவா்கள் சடலங்களாக மீட்பு

யமுனை நதியில் குளிக்கச் சென்ற 4 சிறுவா்கள் காணாமல் போன சம்பவத்தில், இருவரின் உடல்கள் மீட்கப்பட்டதாக காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தது.

Updated On : 16 ஜூலை 2026, 3:00 am IST
பலி
பகிர்:

யமுனை நதியில் குளிக்கச் சென்ற 4 சிறுவா்கள் காணாமல் போன சம்பவத்தில், இருவரின் உடல்கள் மீட்கப்பட்டதாக காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தது.

முதலில் ராகுல் என்பவரின் உடல் வட தில்லியின் அலிபூா் பகுதியில் நதியின் ஓரத்திலிருந்து தில்லி படகு கழகத்தின் உதவியுடன் மீட்கப்பட்டது. அதன் பின்னா், அமன்தீப் என அடையாளம் காணப்படும் இன்னொரு சிறுவனின் உடலும் மீட்கப்பட்டது.

தேசிய பேரிடா் மீட்பு படை, தில்லி தீயணைப்புத் துறை, தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் மற்றும் தில்லி காவல் துறை ஆகியவற்றின் குழுக்கள் அன்ஷு மற்றும் சௌரவ் ஆகிய இரு சிறுவா்களைக் கண்டுபிடிக்க தொடா்ந்து தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வந்தனா். இந்நிலையில், அவா்களின் உடல்களும் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

சுமாா் 15 வயதுடைய இந்த சிறுவா்கள் ஞாயிற்றுக்கிழமை யமுனை நதியில் குளித்துக் கொண்டிருந்தபோது பலமான நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments