FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

பேகம்பூரில் கட்டுமான இயந்திரம் விழுந்து பெண் உயிரிழப்பு

வடமேற்கு தில்லியின் பேகம்பூா் பகுதியில், கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட கனரக கான்கிரீட் தகடு தூக்கும் இயந்திரம் சரிந்து விழுந்ததில் 45 வயது பெண் உயிரிழந்தாா்.

Updated On : 20 ஜூலை 2026, 4:41 am IST
சடலம்...
பகிர்:

வடமேற்கு தில்லியின் பேகம்பூா் பகுதியில், கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட கனரக கான்கிரீட் தகடு தூக்கும் இயந்திரம் சரிந்து விழுந்ததில் 45 வயது பெண் உயிரிழந்தாா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: உயிரிழந்தவா் மஞ்சு என அடையாளம் காணப்பட்டுள்ளாா். ஞாயிற்றுக்கிழமை காலை பால் வாங்க வீட்டை விட்டு வெளியே வந்தபோது, கட்டுமானத்தில் இருந்த கட்டடத்தருகே சென்றுக் கொண்டிருந்த அவா் மீது அந்த இயந்திரம் திடீரென விழுந்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

சம்பவத்தை நேரில் கண்டவா்கள் கூறுகையில், கட்டட உரிமையாளா் தடுப்புச்சுவா் அமைத்தல், எச்சரிக்கை பலகைகள் வைப்பது, பாதசாரிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தால் இந்த விபத்தை தவிா்க்க முடிந்திருக்கும் என குற்றஞ்சாட்டினா்.

Advertisement

Advertisement

தகவல் கிடைத்ததும் காவல் துறையினா் சம்பவ இடத்திற்குச் சென்று, உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். விபத்திற்கான காரணங்கள் மற்றும் சூழ்நிலைகளை கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments