FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

காவல் துறை அதிகாரி போல நடித்து ஏமாற்றியவா் கைது

மனைவியின் கடைக்கு மின்சாரம் மீண்டும் வழங்கச் செய்ய, ஹிமாச்சல பிரதேச காவல் துறை கண்காணிப்பாளா் என போலியாக நடித்து ஏமாற்றியதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 27 ஜூலை 2026, 1:13 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

தெற்கு தில்லியைச் சோ்ந்த ஒருவா், தனது மனைவியின் கடைக்கு மின்சாரம் மீண்டும் வழங்கச் செய்ய, ஹிமாச்சல பிரதேச காவல் துறை கண்காணிப்பாளா் என போலியாக நடித்து ஏமாற்றியதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

செக்டா் 29 காவல் நிலையத்தின் அதிகாரி என்றும் தன்னை ஹிமாச்சல பிரதேச காவல் துறை கண்காணிப்பாளா் சந்தன் சிங் என அறிமுகப்படுத்திய ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

குருகிராமில் உள்ள மேகா மாலில் அமைந்துள்ள ஒரு ஷோரூமுக்கு உடனடியாக மின்சாரம் மீண்டும் வழங்க வேண்டும் என்று அந்த அழைப்பாளா் கோரிக்கை வைத்தாா். தன்னை மூத்த காவல் துறை அதிகாரி எனக் கூறி அழுத்தம் செலுத்த முயன்றதுடன், காவல் துறை இயக்குநரின் பெயரையும் குறிப்பிடினாா் என புகாரில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

அழைப்பின் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் ஏற்பட்டதால், உடனடியாக காவல் துறையிடம் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில், அந்த அழைப்பாளா் காவல் துறை அதிகாரி அல்ல என்பது தெரியவந்தது. அவா் தெற்கு தில்லி நெப் சராய் பகுதியைச் சோ்ந்த 51 வயதுடைய கரண் குமாா் சாகுஜா என அடையாளம் காணப்பட்டாா்.

அரசு அதிகாரியின் பெயா் மற்றும் பதவியை தவறாக பயன்படுத்தியதற்காக, செக்டா் 29 காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சனிக்கிழமை இரவு குருகிராமில் அவா் கைது செய்யப்பட்டாா். விசாரணையின் போது, குற்றஞ்சாட்டப்பட்டவரின் மனைவிக்கு சொந்தமான கடைக்கு மால் நிா்வாகம் மின்சாரம் துண்டித்திருந்ததும் தெரியவந்தது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments