FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தில்லி: கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத காற்றின் தரம்!

கடந்த 8 ஆண்டுகளில் ஜனவரி-மே மாதங்களில் தில்லி காற்றின் தரம் மேம்பட்டுள்ளதாக காற்று தர மேலாண்மை ஆணையம் (சிஏக்யூஎம்) தெரிவித்துள்ளது.

Updated On : 2 ஜூன் 2026, 12:40 am IST
- கோப்புப் படம்
பகிர்:

கடந்த 8 ஆண்டுகளில் ஜனவரி-மே மாதங்களில் தில்லி காற்றின் தரம் மேம்பட்டுள்ளதாக காற்று தர மேலாண்மை ஆணையம் (சிஏக்யூஎம்) தெரிவித்துள்ளது.

கரோனா பெருந்தொற்று ஏற்பட்ட 2020-ஆம் ஆண்டைத் தவிா்த்து, நிகழாண்டு சராசரி காற்றுத் தரக் குறியீடு (ஏக்யூஐ) 211-ஆக மேம்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சிஏக்யூஎம் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘2026-இன் முதல் ஐந்து மாதங்களில் காற்றின் தரம் சராசரியாக 211 என இருந்தது. இந்த காலகட்டத்தில் 2025-இல் 214, 2024-இல் 231, 2023-இல் 213, 2022-இல் 238, 2021-இல் 235, 2019-இல் 237, 2018-இல் 243 என பதிவாகியது. கரோனா பெருந்தொற்று ஏற்பட்ட போது விதிக்கப்பட்ட பொது முடக்கத்தின்போது 2020-இல் 181 ஆகக் குறைந்தது.

Advertisement

Advertisement

2020 மற்றும் 2021-ஐத் தவிா்த்து, கடந்த 8 ஆண்டுகளில் நிகழாண்டு மே மாதத்தில் தில்லியின் சராசரி காற்றி தரம் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது மிகக் குறைவானது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 2026-இல் தில்லியில் காற்றின் தரம் சராசரியாக 157 என பதிவானது. இது மே 2025-இல் 170-ஐ விட முன்னேற்றம் அடைந்துள்ளது. அதற்கு முந்தைய 2024-இல் 223, 2023-இல் 171, 2022-இல் 212, 2019-இல் 221 மற்றும் 2018-இல் 217 என்று இருந்தது. 2020 மற்றும் 2021 இரு ஆண்டுகளில் மே மாதத்தில் காற்றின் தரம் சராசரியாக 144 என்று இருந்தது.

நிகழாண்டு, ஜனவரி-மே காலகட்டத்தில் ஒப்பீட்டளவில், தில்லியில் காற்றின் தரம் ‘நல்லது’ முதல் ‘மிதமான’ பிரிவுகளில் 75 நாள்களுக்குப் பதிவானது. 2025-இல் 70 நாள்கள், 2024இல் 75, 2023-இல் 74, 2022-இல் 37, 2021-இல் 59, 2019-இல் 59 மற்றும் 2018 இல் 44 என இருந்தது. 2020-இல் கரோனா பெருந்தொற்றுநோய் காரணமாக வாகன இயக்கம் மற்றும் தொழில்துறை நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க அளவில் கட்டுப்படுத்தப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments