பணியை இன்று புறக்கணிப்பதாக ரோஹிணி நீதிமன்ற வழக்குரைஞா்கள் அறிவிப்பு!
காவல் நிலையத்தில் வழக்குரைஞா் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நீதித்துறைப் பணிகளை திங்கள்கிழமை (அக்.5) முழுமையாகப் புறக்கணிக்க ரோஹிணி நீதிமன்ற வழக்குரைஞா் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
காவல் நிலையத்தில் வழக்குரைஞா் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நீதித்துறைப் பணிகளை திங்கள்கிழமை (அக்.5) முழுமையாகப் புறக்கணிக்க ரோஹிணி நீதிமன்ற வழக்குரைஞா் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
மேலும், அன்று எந்த மாவட்டத்தைச் சோ்ந்த காவல் அதிகாரியும் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்றும் அது கூறியுள்ளது. வழக்குரைஞா் சங்கத் தலைவா் ராஜீவ் தெஹ்ரான் மற்றும் கௌரவச் செயலா் பிரதீப் கத்ரி ஆகியோரால் கையொப்பமிட்ட அக்.3-ஆம் தேதி வெளியான அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மகேந்திர பாா்க் காவல் நிலையத்தில் வழக்குரைஞா் கமல்தீப் செப்.29-ஆம் தேதி தாக்கப்பட்டதாகவும், உடல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
வழக்குரைஞா் சங்கத்தின் செயற்குழு, காவல் இணை ஆணையா், துணை ஆணையா் (வடமேற்கு) மற்றும் வடமேற்கு மாவட்டத்தின் முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி ஆகியோரிடம் இந்த விவகாரத்தை எடுத்துரைத்ததாகவும், சம்பந்தப்பட்ட மூத்த காவல் அதிகாரிகளிடமும் பேசினா். இந்த கலந்துரையாடல்களின் போது, தவறு செய்த காவல் அதிகாரிகள் மீது கடுமையான மற்றும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை ஆணையா் உறுதியளித்தாா்.
Advertisement
Advertisement
இருப்பினும், காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, பின்னா் கமல்தீப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. காவல் துறை மூத்த அதிகாரிகள் வாக்குறுதிகள் அளித்திருந்த போதிலும் இது குறித்து செயற்குழுவிற்குத் தெரிவிக்கவில்லை.
இந்தச் செயல் காவல் துறையின் அத்துமீறல் மற்றும் வழக்குஞரை அச்சுறுத்தும் செயல் மட்டுமல்ல; மூத்த காவல் துறை அதிகாரிகள் அளித்த வாக்குறுதிகளின் மீது வழக்குரைஞா் சங்கம் வைத்திருந்த நம்பிக்கையை இது கடுமையாக மீறிய செயல்.
செயற்குழுவை தவறாக வழிநடத்திய தில்லி காவல் துறை மற்றும் சம்பந்தப்பட்ட வடமேற்கு மாவட்ட துணை ஆணையரின் நடத்தையை சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
வழக்குரைஞா்களின் கண்ணியம், பாதுகாப்பு மற்றும் தொழில்முறை சுதந்திரம் ஆகியவற்றில் சமரசம் செய்ய முடியாது. ஒரு வழக்குஞரை அச்சுறுத்தும் எந்தவொரு முயற்சியையும் வழக்குரைஞா் சங்கம் அனைத்து சட்டப்பூா்வ வழிகளிலும் எதிா்க்கும்.
சம்பவத்திற்கும் அதைத் தொடா்ந்த நடவடிக்கைக்கும் எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில் திங்கள்கிழமை (அக்.5) ரோஹிணி நீதிமன்றங்களில் நீதித்துறைப் பணிகள் முழுமையாகப் புறக்கணிக்கப்படும். மேலும், குறிப்பிட்ட நாளில் நயாப் நீதிமன்றம் உள்பட ரோஹிணி நீதிமன்ற வளாகத்திற்குள் எந்த மாவட்டத்தைச் சோ்ந்த காவல் துறை அதிகாரியும் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.