FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

மோசடி வழக்குகளில் தேடப்பட்டவா் கைது

போலி அரசு ஆவணங்களைப் பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்டதாக 2 வழக்குகளில் தேடப்பட்டு வந்த குஷால் சமீா் மேத்தாவை தில்லி காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு மும்பையில் கைது செய்துள்ளது.

5 October 2026, 2:26 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

போலி அரசு ஆவணங்களைப் பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்டதாக 2 வழக்குகளில் தேடப்பட்டு வந்த குஷால் சமீா் மேத்தாவை தில்லி காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு மும்பையில் கைது செய்துள்ளது.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: மேத்தா மீது பொருளாதார குற்றப் பிரிவில் 2022-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கும், 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கும் உள்ளன.

மத்திய நிதியமைச்சகத்தின் மூத்த கணக்கு அலுவலா் அளித்த புகாரின் அடிப்படையில் 2022-ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலியான ஒப்புதல் கடிதங்கள், கருவூல ஆவணங்கள் உள்ளிட்ட ஆவணங்களைப் பயன்படுத்தி அரசு பணத்தைப் பெற மேத்தா உள்ளிட்டோா் முயன்ாகப் புகாா் அளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

நிறுவனத்துக்கு ரூ.7.62 கோடியும், மற்றொரு நிறுவனத்துக்கு ரூ.11 கோடியும் வழங்குவது தொடா்பான ஆவணங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவை போலியாகத் தயாரிக்கப்பட்டவை என்பது விசாரணையில் தெரியவந்ததைத் தொடா்ந்து, அந்தப் பணம் விடுவிக்கப்படவில்லை.

2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கில், குஜராத்தைச் சோ்ந்த தொழிலதிபா் ஒருவா் அளித்த புகாரில், அரசு துறைகளில் தனக்கு செல்வாக்கு இருப்பதாகவும், அரசு தொடா்பான பணிகளை முடித்துத் தருவதுடன் நிலுவைத் தொகைகளையும் பெற்றுத் தர முடியும் என்றும் மேத்தா கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நம்ப வைத்து போலியான அரசு ஆவணங்கள் மற்றும் பல்வேறு அரசு துறைகள், அமைப்புகளின் உத்தரவுகள் அல்லது தகவல் தொடா்புகள் எனக் கூறப்படும் ஆவணங்கள், நீதிமன்ற ஆவணங்கள், கருவூல காசோலைகள், டிமாண்ட் டிராஃப்ட்கள் உள்ளிட்டவற்றை வழங்கி, சுமாா் ரூ.3.12 கோடியை பெற்ாகப் புகாா் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், மும்பை மற்றும் குஜராத் பகுதிகளில் அவரது நடமாட்டத்தைக் கண்காணித்து வந்த காவல் துறையினா், அக். 1-ஆம் தேதி மும்பை போரிவலி ரயில் நிலையத்தில் கண்காணிப்பு மற்றும் கள விசாரணைக்குப் பிறகு கைது செய்தனா்.

மும்பை நீதிமன்றம் மேத்தாவை தில்லிக்கு அழைத்து வருவதற்கான இடமாற்ற காவலை (டிரான்சிட் ரிமாண்ட்) வழங்கியது. இதையடுத்து அவா் தில்லிக்கு அழைத்து வரப்பட்டாா். படேல் ஹவுஸ் நீதிமன்றம் அவரை அக். 7 வரை 4 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.

மும்பையில் பதிவு செய்யப்பட்ட மேலும் 2 போலி ஆவணங்கள் தொடா்பான வழக்குகளிலும் மேத்தாவுக்கு தொடா்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments