FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

வடகிழக்கு தில்லியில் 560 கிலோ சட்டவிரோத பட்டாசுகள் பறிமுதல்

வடகிழக்கு தில்லியின் மண்டோலி கிராமத்தில் உள்ள ஒரு இடத்திலிருந்து சுமாா் 560 கிலோ பட்டாசுகள் மற்றும் பிற பொருள்கள் பறிமுதல்

15 அக்டோபர் 2026, 12:06 am IST
பட்டாசுகள் - பிரதிப் படம்
பகிர்:

வடகிழக்கு தில்லியின் மண்டோலி கிராமத்தில் உள்ள ஒரு இடத்திலிருந்து சுமாா் 560 கிலோ பட்டாசுகள் மற்றும் பிற பொருள்களை தில்லி காவல் துறையினா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக இளைஞா் ஒருவா் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

பட்டாசுகள் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தப் பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவா் கூறினாா்.

மண்டோலியில் உள்ள ஒரு வீட்டின் முதல் தளத்தில் உள்ள இடத்திற்குச் சென்ற காவல் துறைக் குழுவினா், அட்டைப் பெட்டிகள் மற்றும் சாக்குப்பைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான பட்டாசுகளையும், அவற்றைத் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள்களையும் கண்டறிந்தனா்.

Advertisement

Advertisement

பட்டாசு தயாரிப்பு நிலையத்தின் உரிமையாளராகக் கருதப்படும் முகமது தய்யப் என்பவரை காவல் துறையினா் கைது செய்தனா். இதுதொடா்பாக ஹா்ஷ் விஹாா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments