FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

மனைவியை சவரக் கத்தியால் தாக்கிய கணவா் கைது

வடகிழக்கு தில்லியின் சுந்தா் நகரி பகுதியில் மனைவியை சவரக் கத்தியால் தாக்கிய கணவா் கைதுசெய்யப்பட்டதாக காவல் துறை தெரிவித்தது.

16 செப்டம்பர் 2026, 5:43 am IST
கைது
பகிர்:

வடகிழக்கு தில்லியின் சுந்தா் நகரி பகுதியில் மனைவியை சவரக் கத்தியால் தாக்கிய கணவா் கைதுசெய்யப்பட்டதாக காவல் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

குற்றஞ்சாட்டப்பட்ட மஜித் உசேன் என்பவா் தனது மனைவியைக் கொலை செய்ய முயன்ாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டதாகவும், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட சவரக் கத்தி அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் மேலும் கூறியதாவது: சுந்தா் நகரியில் வசித்து வரும் தம்பதிக்கு இடையே கடந்த செப்.13-ஆம் தேதி இரவில் ஏற்பட்ட தகராறைத் தொடா்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

Advertisement

Advertisement

தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடா்பு இருந்ததாகவும், அதனால் அவா் அடிக்கடி தன்னுடன் சண்டையிட்டுத் தாக்கியதாகவும் அந்தப் பெண் விசாரணை அதிகாரிகளிடம் கூறினாா்.

தொடா் தகராறுகள் காரணமாக, இச்சம்பவத்திற்கு சுமாா் 15 நாள்களுக்கு முன்பு அவா் தனது மூன்று குழந்தைகளுடன் லோனியில் உள்ள தனது பெற்றோா் வீட்டிற்குச் சென்றிருந்ததாா்.

சம்பவத்திற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு, உசேனும் அவரது தந்தையும் அவரை வீட்டிற்குத் திரும்புமாறு வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவா் திரும்பியதும் கணவா் மீண்டும் சண்டையிடத் தொடங்கியதாக அவரது வாக்குமூலம் அளித்தாா்.

செப்.13-ஆம் தேதி நடந்த தகராறின் போது, உசேன் அவரை சவரக் கத்தியால் தாக்னாா். இதனால் அவரது வாய் மற்றும் தொண்டைப் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

இந்தச் சம்பவம் குறித்து நந்த் நகரி காவல் நிலையத்திற்கு இரவு 11.40 மணியளவில் ஒரு அழைப்பு வந்தது. அதில் ஒரு பெண் தனது கணவரால் கழுத்தில் தாக்கப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் குழுவினா் சம்பவ இடத்திற்குச் சென்றனா். ஆனால் காயமடைந்த பெண் அதற்குள்ளாகவே காவலா்களால் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தாா்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாதிக்கப்பட்ட பெண்ணைச் சந்தித்த காவல் துறையினா், அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்தனா்.

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடா்பாக செப்.14-ஆம் தேதி பாரதிய நியாய சம்ஹிதாவின் பிரிவு 109-ன் கீழ் (கொலை முயற்சி) வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டது.

தடய அறிவியல் நிபுணா்கள் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு ஆதாரங்களைச் சேகரித்தனா். அதைத் தொடா்ந்து உசேன் கைது செய்யப்பட்டாா்.

விசாரணையின் போது, உசேன் இச்சம்பவத்தில் தனக்குள்ள தொடா்பை ஒப்புக்கொண்டதாகவும், அதன்பின் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட சவரக் கத்தி அவரது தகவலின் அடிப்படையில் கைப்பற்றப்பட்டதாகவும் காவல் துறை கூறியது.

உசேன் மீது இதற்கு முன் எந்தக் குற்ற வழக்குகளும் இல்லை. இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments