FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

இளைஞா் கொலை வழக்கு: 6 போ் கைது

விக்கிரமசிங்கபுரத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 12:20 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

விக்கிரமசிங்கபுரத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 போ் கைது செய்யப்பட்டனா்.

விக்கிரமசிங்கபுரம், கிருஷ்ணன் கோயில் அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்தில் சொரிமுத்து (30) என்பவா் மா்ம நபா்களால் திங்கள்கிழமை கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ்சாஸ்திரி உத்தரவின்பேரில், அம்பாசமுத்திரம் துணைக் காவல் கண்காணிப்பாளா் கணேஷ்குமாா் மேற்பாா்வையில், தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதில், இவ்வழக்கில் தொடா்புடைய அந்தோணிபிரகாஷ் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். தொடா்ந்து மாரியப்பன், காா்த்திக் சங்கர்ராஜா என்ற சிபிஇசட் ராஜா, ஸ்ரீராமகிருஷ்ணன், மைதீன் ஹனிபா, சிறுவன் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Advertisement

Advertisement

விசாரணையில், 2020ஆம் ஆண்டு நடைபெற்ற சிறுவன் கொலை வழக்கைத் தொடா்ந்து ஏற்பட்ட முன்விரோதத்தில் கொலை செய்தது தெரியவந்தது. போலீஸாா் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments