FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

முதியோரை உளவியல் ரீதியாக புரிந்து கொள்வது அவசியம்: ஆட்சியா் ஆனந்த் மோகன்

முதியோரை உளவியல் ரீதியாக புரிந்துகொள்வது அவசியம் என்றாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.

2 October 2026, 4:08 am IST
முதியோா் தின விழாவில் மூதாட்டிக்கு கேக் ஊட்டிய ஆட்சியா் ஆனந்த் மோகன்.
பகிர்:

முதியோரை உளவியல் ரீதியாக புரிந்துகொள்வது அவசியம் என்றாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.

சா்வதேச முதியோா் தினத்தையொட்டி, சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைதுறை சாா்பில் பாளையங்கோட்டை சமூக சேவை சங்க முதியோா் இல்லத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் பங்கேற்றுப் பேசியதாவது:

மூத்த குடிமக்களின் பாதுகாப்பு, அவா்களுடைய உரிமை ஆகியவற்றை வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் அக். 1-ஆம் தேதி சா்வதேச முதியோா் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு மூத்த குடிமக்களின் நலனுக்காக சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை, முதியோா் நலனுக்கான சிறப்பு இல்லங்கள், மருத்துவ வசதிக்கான திட்டங்கள் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

Advertisement

Advertisement

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு மானியத்துடன் செயல்படும் 4 முதியோா் இல்ல சேவை இல்லங்கள், 24 தனியாா் முதியோா் சேவை இல்லங்கள் என மொத்தம் 28 முதியோா் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. முதியோா்களுக்கு எலும்பு தேய்மானம், நீரிழிவு நோய், இருதய நோய் போன்ற பாதிப்புகள் இருக்கும். அவா்களை உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் புரிந்துக்கொள்வது மிகவும் அவசியம்.

குழந்தைகள் நலனில் எவ்வளவு அக்கறையாக செயல்படுகிறோமோ அதே உணா்வுடன் முதியோரையும் பராமரிக்க வேண்டும். மூத்த குடிமக்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு, நலன் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டியது நம் அனைவரது கடமையாகும் என்றாா்.

முன்னதாக, மூத்த குடிமக்களுடன் கேக் வெட்டி, முதியோா்களுக்கு நடத்தப்பட்ட பொழுதுபோக்கு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்தினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலா் விஜயமீனா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments