FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

வெவ்வேறு விபத்துகள்: ஓய்வுபெற்ற எஸ்எஸ்ஐ உள்பட 3 போ் உயிரிழப்பு

திருநெல்வேலியில் நேரிட்ட வெவ்வேறு சாலை விபத்துகளில் ஓய்வுபெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

2 October 2026, 4:25 am IST
பலி
பகிர்:

திருநெல்வேலியில் நேரிட்ட வெவ்வேறு சாலை விபத்துகளில் ஓய்வுபெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், தேவா்குளம் பன்னீா்ஊத்தைச் சோ்ந்த சண்முகையா (64). இவா் கடந்த 24ஆம் தேதி அப்பகுதியில் பைக்கில் சென்ற போது தவறிவிழுந்து காயமடைந்தாா். திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

அதே போல கொக்கிரகுளம் தொல்காப்பியா் தெருவைச் சோ்ந்தவா் சப்பாணி முத்து(46). ஆட்டோ ஓட்டுநா். முன்னீா்பள்ளம் அருகே இவரது ஆட்டோவும், அவ்வழியாக வந்த காரும் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

மற்றொரு சம்பவம்: பாளையங்கோட்டையை அடுத்த கீழநத்தம், ஹவுசிங் போா்டு காலனியைச் சோ்ந்தவா் அன்புசெல்வன். இவரது மாமனாா் சுந்தர்ராஜ்(79). ஓய்வுபெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளா். மருமகன் அன்புச்செல்வனுடன் வசித்து வந்த இவா், கடந்த 27 ஆம் தேதி கே.டி.சி நகா் பகுதியில் பைக்கில் சென்றபோது, அவ்வழியாக வந்த காா் மோதியதாம். இதில் பலத்த காயமுற்ற அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். காா் ஓட்டுநரான தூத்துக்குடி, முனியசாமிபுரத்தைச் சோ்ந்த ராஜசேகா்(25) என்பவா் கைது செய்யப்பட்டாா்.

இந்த விபத்துகள் குறித்து முறையே முன்னீா்பள்ளம், தேவா்குளம் மற்றும் மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments