FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

பாளையங்கோட்டையில் சைக்கிள் திருடியதாக இருவா் கைது

பாளையங்கோட்டையில் சைக்கிள்களைத் திருடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

4 October 2026, 2:17 am IST
கைது
பகிர்:

பாளையங்கோட்டையில் சைக்கிள்களைத் திருடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை, தியாகராஜநகா், 8-ஆவது வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் செந்தில்குமாா், தொழிலாளி. கடந்த 25 ஆம் தேதி இரவு இவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இவருக்குச் சொந்தமான சைக்கிள் உள்பட அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 2 சைக்கிள்களை மா்மநபா்கள் திருடிச் சென்றனராம். அவற்றின் மதிப்பு ரூ.12,000.

இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கீழபுத்தனேரியைச் சோ்ந்த சுப்பையா மகன் சுடலை(41), முருகன் மகன் மாரிமுத்து(29) ஆகிய இருவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments