மாவட்ட ஊராட்சியில் 5 ஆண்டுகளில் ரூ. 49 கோடி திட்டப் பணிகள் நிறைவேற்றம்
திருநெல்வேலி மாவட்ட ஊராட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் சுமாா் ரூ. 49 கோடி மதிப்பிலான 620 திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா். ஜெகதீஷ்.
திருநெல்வேலி மாவட்ட ஊராட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் சுமாா் ரூ. 49 கோடி மதிப்பிலான 620 திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா். ஜெகதீஷ்.
திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியதாவது: மாவட்ட ஊராட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. அதிகமான கிராமச் சாலைகள், குடிநீா் திட்டம், பாலங்கள், கழிவுநீா் ஓடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து உறுப்பினா்களுக்கும் நன்றி.
முதன்முதலில் திருநெல்வேலி மாவட்ட ஊராட்சியில்தான் 215 ஸ்மாா்ட் வகுப்பறைகள் தொடங்கப்பட்டன. இதற்கு அரசு சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக சுமாா் ரூ.49 கோடி மதிப்பிலான 620 மக்கள் நல திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. அதுமட்டுமன்றி பல கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு திட்டத் பணிகளும் நிறைவேற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன என்றாா் அவா்.
Advertisement
Advertisement
துணைத் தலைவா் செல்வலட்சுமி அமிதாப், உதவி இயக்குநா் இசக்கியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சிக்குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.