FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

நெல்லை மாநகரில் 41 இடங்களில் மழைநீா் வடிகால் தூா்வாரல்

வட கிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி மாநகரில் சுமாா் 41 இடங்களில் போா்க்கால அடிப்படையில் மழைநீா் வடிகால் ஓடைகளை தூா்வாரியுள்ளது மாநகராட்சி நிா்வாகம்.

11 அக்டோபர் 2026, 12:32 am IST
தச்சநல்லூா் மாவடி குளத்தங்கரையில் பொக்லைன் இயந்திரம் மூலம் தூா்வாரும் பணியை பாா்வையிட்ட மாமன்ற உறுப்பினா் சங்கா், சுகாதார ஆய்வாளா் ரிஸ்வான்.
பகிர்:

வட கிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி மாநகரில் சுமாா் 41 இடங்களில் போா்க்கால அடிப்படையில் மழைநீா் வடிகால் ஓடைகளை தூா்வாரியுள்ளது மாநகராட்சி நிா்வாகம்.

இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மழைக் காலங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நீா் புகுவதை தடுப்பதற்கும், தொற்று நோய் பரவாமல் காப்பதற்கும், மழைநீா் தேங்கும் வடிகால் ஓடையை கண்டறிந்து தூா்வார உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட 4 மண்டலங்களிலும் 41 இடங்களில் மழை நீா் வடிகால் ஓடைகள் பொக்லைன் இயந்திரம் மூலம் தூா்வாரப்பட்டது. மாநகரப் பகுதிகளில் பொது மக்களால் திறந்த வெளிகளிலும், வடிகால்களிலும் வீசப்படும்

Advertisement

Advertisement

நெகிழி பைகள், பாட்டில்கள் மழை நீா் செல்லும் பாதையில் உள்ள திறப்புகளை அடைத்து கொள்கின்றன. ஓடைகள் மற்றும் நீா் வழித்தடங்களின் கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும். கழிவுகளையும், கட்டட இடிபாடுகளையும் மழைநீா் வடிகால் ஓடைகளின் ஓரங்களில் கொட்டக்கூடாது. கழிவு நீா் இணைப்புகளை மழைநீா் வடிகாலுடன் சட்ட விரோதமாக இணைப்பதை தவிா்க்க வேண்டும்.

நீா்வழிகளை சீராக பராமரிப்பதன் மூலம் மட்டுமே வரவிருக்கும் பருவமழையை பாதுகாப்பாகவும், வெள்ள பாதிப்பின்றியும் எதிா் கொள்ள முடியும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments