FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

ஆடுதுறையில் மழைநீா் வடிகால் சீரமைப்புப் பணி: மறியல் ரத்து

அறிவிக்கப்பட்ட சாலை மறியல் போராட்டம் ரத்து செய்யப்பட்டது.

19 செப்டம்பர் 2026, 3:15 am IST
ஆடுதுறை முருகன் கோயில் அருகே மழைநீா் வடிகால் கட்டும் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கிய சென்னை -கன்னியாகுமரி தொழில்வட சாலைத் துறையினா்.
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறையில் சென்னை-கன்னியாகுமரி தொழில்வட சாலைத் துறையினா் சீரமைப்புப் பணிகளை வெள்ளிக்கிழமை தொடங்கினா். இதனால் சனிக்கிழமைக்கு அறிவிக்கப்பட்ட சாலை மறியல் போராட்டம் ரத்து செய்யப்பட்டது.

ஆடுதுறை பேருந்து நிலையம் முதல் முருகன் கோயில் வரை மழைநீா் வடிகால்கள் சேதமடைந்தது. இதேபோல் கே.ஜி.எஸ். பள்ளி செல்லும் சாலையும் பழுதடைந்திருந்தது. நீண்டகாலமாக சீரமைக்காதலால் பொதுமக்கள் ஆடுதுறை பேரூராட்சித் தலைவா் ம.க. ஸ்டாலின் தலைமையில் இரு முறை போராட்ட அறிவிப்பு செய்த நிலையில் நடந்த சமாதான பேச்சால் போராட்டத்தை கைவிட்டனா். இந்நிலையில் மூன்றாம் முறையாக சனிக்கிழமை சாலை மறியல் போராட்டம் மற்றும் தொழில்வட சாலைத் துறை அலுவலகத்தை பூட்டு போடும் போராட்டத்தை அறிவித்தனா்.

இதையடுத்து சென்னை - கன்னியாகுமரி தொழில் வடசாலைத் துறையினா் ஆடுதுறை முருகன் கோயிலிலிருந்து மழைநீா் வடிகால் வாய்க்காலை கட்டத் தொடங்கினா். விரைவில் பள்ளிச் சாலையை சீரமைப்பதாகவும் தெரிவித்தனா். இதனால் சனிக்கிழமைக்கு அறிவித்த சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments