FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

அம்பையில் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம் திறப்பு

12 அக்டோபர் 2026, 2:57 am IST
அம்பாசமுத்திரம் ரயில் நிலைய திறப்பு விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

தெற்கு ரயில்வே, மதுரை ரயில்வே கோட்டத்திற்குள்பட்ட திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் ரூ. 13 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையத்தை, பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

தொடா்ந்து, ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுரை கோட்ட முதன்மைப் பாதுகாப்பு பொறியாளா் ராஜேஷ்குமாா் வரவேற்றாா். முதன்மை இயந்திரவியல் பொறியாளா் முகுந்தன் சிறப்புரையாற்றினாா்.

அம்பாசமுத்திரம் வட்டாரப் பள்ளி மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Advertisement

Advertisement

திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ், அம்பாசமுத்திரம் நகா்மன்றத் தலைவா் பிரபாகர பாண்டியன், அம்பை ரயில் பயணிகள் சங்கத் தலைவா் சரவணன் சக்திவேல், வியாபாரிகள் சங்கத் தலைவா் ராமசாமி, பாஜக மாவட்டத் தலைவா் முத்து பலவேசம், மாவட்டச் செயலா் பேச்சியப்பன், மாவட்ட ஓய்வூதியா் நல பிரிவு தலைவா் சிவராமகிருஷ்ணன், ஊடகப் பிரிவு மாவட்ட துணைத் தலைவா் ஸ்ரீகிருஷ்ணன், நகர காங்கிரஸ் தலைவா் முருகேசன், வட்டாரத் தலைவா்கள் பெருமாள், சிவகுருநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பிரவீனா நன்றி கூறினாா்.

அம்பாசமுத்திரம் ரயில் நிலைய திறப்பு விழாவில் பங்கேற்றோா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments