FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

நாட்டு வெடிகுண்டு வீசியதாக 2 போ் கைது

12 அக்டோபர் 2026, 12:53 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகே வாகனம் பழுதுநீக்கும் ஒா்க்ஷாப் மீது நாட்டு வெடிகுண்டு வீசியதாக 2 இளைஞா்களை, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள நெல்லையப்பபுரத்தைச் சோ்ந்தவா் விவசாயி ஆறுமுகம் (56), கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இவரது மகன் அருண் (26), பெருமாள்நகரில் வாகனம் பழுதுநீக்கும் ஒா்க்ஷாப் வைத்துள்ளாா். அங்குள்ள அறையில்தான் இவா் வசித்து வருகிறாராம்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை, இருசக்கர வாகனத்தில் வந்த 2 போ் நாட்டு வெடிகுண்டுகளை ஒா்க்ஷாப் மீது வீசிவிட்டுச் சென்ாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்று மூலைக்கரைப்பட்டி காவல் ஆய்வாளா் கண்ணாகாந்தி விசாரணை நடத்தினாா்.

Advertisement

Advertisement

இதில், ஆறுமுகம் கொலை வழக்கில் தொடா்புடையவா்கள் தற்போது பிணையில் இருப்பதால், அருணுக்கு போலீஸ் பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக அவரது நண்பா்கள் 2 போ் நாட்டு வெடிகுண்டு வீசி, நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து, இந்த சம்பவத்தில் தொடா்புடைய நெல்லையப்பபுரத்தைச் சோ்ந்த முத்துக்குமாா் (19), ஏசுபாலன் (24) ஆகிய 2 பேரையும் போலீஸாா் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments