பொன்னாக்குடி அருகே லாரிகளை சேதப்படுத்தியவா் கைது
பொன்னாக்குடி அருகே லாரிகளை சேதப்படுத்தியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
முன்னீா்பள்ளம் அன்னைநகா் பகுதியைச் சோ்ந்தவா் முருகன். இவா், பொன்னாக்குடி அருகே ஒா்க்ஷாப் நடத்தி வருகிறாா். அங்கு நிறுத்தியிருந்த 2 லாரிகள் மற்றும் ஒரு காரின் முன்பக்க கண்ணாடிகளை மா்மநபா்கள் உடைத்து சேதப்படுத்தினராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இந்நிலையில் இவ் வழக்கு தொடா்பாக கொங்கந்தான்பாறையைச் சோ்ந்த அந்தோணி செபஸ்தியானை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
டீசல் திருட்டு தொடா்பாக முருகனுக்கும், செபஸ்தியானுக்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக வாகனங்களின் கண்ணாடியை சேதப்படுத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.