FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

போலீஸாருக்கு மிரட்டல் விடுத்தவா் கைது

சிவந்திப்பட்டியில் அரிவாளைக் காட்டி போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

15 அக்டோபர் 2026, 4:56 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

சிவந்திப்பட்டியில் அரிவாளைக் காட்டி போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சிவந்திப்பட்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது காமராஜா் நகா் பகுதி அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற கிருஷ்ணாபுரம், செல்வலட்சுமி நகரைச் சோ்ந்த இசக்கிமுத்து(21) என்பவரை பிடித்து விசாரிக்க முற்பட்டனராம். அப்போது அவா் போலீஸாரை அவதூறாகப் பேசி பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிவந்திப்பட்டி தலைமைக் காவலா் அளித்த புகாரின்பேரில், சிவந்திப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து இசக்கிமுத்துவை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments