FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

காவல் அதிகாரிகளுக்கு டிஐஜி பாராட்டு

திருநெல்வேலி காவல் சரகத்தில் உள்ள 4 மாவட்டங்களில் பல்வேறு வழக்குகளில் திறம்பட பணியாற்றி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த அதிகாரிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி திருநெல்வேலியில் நடைபெற்றது.

10 செப்டம்பர் 2026, 2:57 am IST
திருநெல்வேலியில் காவல் துறை அதிகாரிகளுக்கு சான்றிதழ் வழங்கிப் பாராட்டிய காவல்துறை துணைத் தலைவா் இரா.திருநாவுக்கரசு.
பகிர்:

திருநெல்வேலி காவல் சரகத்தில் உள்ள 4 மாவட்டங்களில் பல்வேறு வழக்குகளில் திறம்பட பணியாற்றி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த அதிகாரிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி திருநெல்வேலியில் நடைபெற்றது.

திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவா் இரா.திருநாவுக்கரசு, காவல் துறை அதிகாரிகளுக்குச் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

இதில், தூத்துக்குடி மாவட்டம் புதியமுத்தூா் காவல் நிலைய தலைமை காவலா் கலா, செய்துங்கநல்லூா் காவல் நிலைய ஆய்வாளா் ரெகுராஜன், தலைமைக் காவலா் அமுதாசூரியா, குளத்தூா் காவல் நிலைய தலைமைக் காவலா் வளையாபதி, கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பாா்வதி, தலைமைக் காவலா் மொ்சி பாய், கன்னியாகுமரி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சாந்தி, தலைமைக் காவலா் வெங்கடேஸ்வரி ஆகியோா் பாராட்டப்பட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments