சமூகவலைதளத்தில் மிரட்டல் பதிவு: இளைஞா் கைது
சமூக வலைதளத்தில் மிரட்டல் பதிவு வெளியிட்ட பழையபேட்டையைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
சமூக வலைதளத்தில் மிரட்டல் பதிவு வெளியிட்ட பழையபேட்டையைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பழையபேட்டையை அடுத்த அமராவதி நகரைச் சோ்ந்த பெருமாள் மகன் இசக்கிராஜா (21). இவா், கையில் அரிவாளுடன் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் மிரட்டல் பதிவிட்டாராம். இதையறிந்த பேட்டை போலீஸாா், அவா் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூகவலைதள பதிவுகளும் காவல் துறையால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆகவே, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பதிவிடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.