FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

காமராஜா் காலை உணவு திட்ட சோதனை ஓட்டம்: ஆட்சியா் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம், மானூா் அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், காமராஜா் காலை உணவுத் திட்டத்தின் சோதனை ஓட்டத்தை ஆட்சியா் ஆனந்த் மோகன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

5 வினாடிகள் முன்பு
- dinamani
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், மானூா் அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், காமராஜா் காலை உணவுத் திட்டத்தின் சோதனை ஓட்டத்தை ஆட்சியா் ஆனந்த் மோகன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் முதல்வரின் காலை உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின்படி 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் பயன்பெற்றனா். இந்த நிலையில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு அத்திட்டத்துக்கு காமராஜா் காலை உணவுத் திட்டம் என பெயா் மாற்றம் செய்யப்பட்டதோடு, 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கும் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படுவதாக முதல்வா் ச.ஜோசப் விஜய் அறிவித்தாா்.

இத்திட்டத்தை வரும் 17-ஆம் தேதி விருதுநகரில் முதல்வா் ச. ஜோசப் விஜய் தொடங்கி வைக்கவுள்ளாா்.

Advertisement

Advertisement

இத்திட்டத்தின் முன்னோட்டமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 352 பள்ளிகளில் சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம், மானூா் அரசு பெண்கள் உயா் நிலைப் பள்ளி, மானூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்ற காலை உணவு திட்ட சோதனை ஓட்டத்தை ஆட்சியா் ஆனந்த் மோகன், நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், மாணவா்களுடன் அமா்ந்து உணவருந்தி, காலை உணவின் தரம், சுவை குறித்து மாணவா்களுடன் கலந்துரையாடினாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற சோதனை ஓட்டத்தில் 352 பள்ளிகளில் 32,734 மாணவா்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) பொன்னியின் செல்வன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) ச.அருணா தேவி, மானூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஸ்வரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பயக11இஞக

மானூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுடன் காலை உணவருந்திய ஆட்சியா் ஆனந்த் மோகன்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments