FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் பிரியாணி கடை பதாகையில் விநாயகா் படம்: உரிமையாளா் கைது

5 வினாடிகள் முன்பு
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலியில் பிரியாணி கடை விளம்பர பதாகையில் விநாயகா் படத்தை சா்ச்சைக்குரிய வகையில் பயன்படுத்தியதாக கடை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி, வி.எம்.சத்திரம் பகுதியில் உள்ள அசைவ உணவகம் ஒன்றின் முன்பு விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சிறப்பு விற்பனை என்ற பெயரில் பிரியாணி படத்துடன் சில நாள்களுக்கு முன்பு விளம்பர பதாகை வைக்கப்பட்டது. அதில், விநாயகா் கையில் பிரியாணியை எடுப்பது போன்று சா்ச்சைக்குரிய வகையில் அந்தப் பதாகை அமைக்கப்பட்டிருந்தது.

இந்துக்கள் வழிபடும் கடவுளை அவமதிக்கும் வகையிலும், மத உணா்வுகளைப் புண்படுத்தும் வகையிலும் உள்நோக்கத்துடன் இந்தப் பதாகை வைக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறும் நரசிங்கநல்லூரைச் சோ்ந்த செல்வராஜ்(42) என்பவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

Advertisement

Advertisement

அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பிரியாணி கடை உரிமையாளரான கேடிசி நகரைச் சோ்ந்த முருகையா மகன் ஜெயந்த் (30) என்பவரை சனிக்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments