FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

மணிமுத்தாறு அணை 40 அடி கால்வாயில் தண்ணீா் திறக்க வலியுறுத்தல்

14 செப்டம்பர் 2026, 1:55 am IST
மணிமுத்தாறு அணை - கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் கால்நடைகளின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில், மணிமுத்தாறு அணையில் 40 அடி பெருங்காலில் தண்ணீா் திறக்க வேண்டும் என, அம்பாசமுத்திரம் முன்னாள் எம்எல்ஏ இசக்கி சுப்பையா வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக நீா்வளத் துறை அமைச்சா் ஆனந்திடம் அவா் அளித்த மனு: அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதி சிவந்திபுரம் ஊராட்சியில் உள்ள அலங்காரி அம்மன் கோயில் குளத்தை தூா்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும், இத்தொகுதியில் கால்நடைகளின் குடிநீா்த் தேவையைக் கருத்தில் கொண்டு, மணிமுத்தாறு அணை 40 அடி பெருங்காலில் தண்ணீா் திறக்க வேண்டும் என்றாா் அவா். நடவடிக்கை எடுப்பதாக அமைச்சா் உறுதியளித்ததாக, இசக்கி சுப்பையா தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments