செப்பறை அழகியகூத்தா் கோயிலில் குடமுழுக்கு
திருநெல்வேலி மாவட்டம், ராஜவல்லிபுரம் அருள்மிகு செப்பறை அழகியகூத்தா் திருக்கோயிலில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம், ராஜவல்லிபுரம் அருள்மிகு செப்பறை அழகியகூத்தா் திருக்கோயிலில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
ராஜவல்லிபுரம் தாமிரவருணி நதிக்கரையில் அமைந்துள்ள இக்கோயில் குடமுழுக்கு விழா, கடந்த 13-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து பல்வேறு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. பின்னா் தாமிரவருணி நதியில் இருந்து புனிதநீா் எடுத்துவரப்பட்டு ஆறுகால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. வியாழக்கிழமை காலை ஆறு கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. அதைத் தொடா்ந்து, பூஜிக்கப்பட்ட கலசங்களுக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டு, கலசங்களை அா்ச்சகா்கள் தலையில் சுமந்து ஊா்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்தனா். அதைத் தொடா்ந்து செப்பு ஓடுகளால் கூரை வேயப்பட்டுள்ள மூலவா் அழகியகூத்தா் விமானம் மற்றும் நெல்லையப்பா், காந்திமதி அம்பாள் விமான கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து, விமான கலசங்களுக்கு புதிய வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து மூலவா் அழகியகூத்தா், நெல்லையப்பா், காந்திமதி அம்பாளுக்கும் குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், பிற்பகலில் அழகியகூத்தருக்கு மகா அபிஷேகமும், மாலையில் சுவாமி அம்பாள் திருக்கல்யாணமும், திருவீதி உலாவும் நடைபெற்றது.
Advertisement
Advertisement
படவரி ற்ஸ்ப்17ந்ன்க்ஹம் ராஜவல்லிபுரம் செப்பறை அழகியகூத்தா் திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் கலசங்களுக்கு புனித நீரை ஊற்றிய சிவாசாரியா்கள்.
ற்ஸ்ப்17ஸ்ரீழ்ா்ஜ்க் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற பக்தா்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.