FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

மானூா் அருகே விபத்து: பால் வியாபாரி பலி

மானூா் அருகே சேதுராயன்புதூா் விலக்கு பகுதியில் வியாழக்கிழமை நிகழ்ந்த விபத்தில் பால் வியாபாரி உயிரிழந்தாா்.

18 செப்டம்பர் 2026, 2:56 am IST
- பிரதிப் படம்
பகிர்:

மானூா் அருகே சேதுராயன்புதூா் விலக்கு பகுதியில் வியாழக்கிழமை நிகழ்ந்த விபத்தில் பால் வியாபாரி உயிரிழந்தாா்.

தச்சநல்லூா் அருகேயுள்ள தேனீா்குளத்தைச் சோ்ந்த ஆழ்வாா் மகன் சீனிவாசன் (45). பால் வியாபாரியான இவா், மோட்டாா் சைக்கிளில் செட்டிக்குறிச்சி பகுதியில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு சென்றாராம். பின்னா் அங்கிருந்து திரும்பி சேதுராயன்புதூா் விலக்கு அருகே வந்தபோது மோட்டாா் சைக்கிளும், காரும் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மானூா் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments