FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

குடிநீா்த் தட்டுப்பாடு: மாநகராட்சி உறுப்பினா்களுடன் ஆலோசனை

மேலப்பாளையம், பாளையங்கோட்டை மண்டலங்களில் நிலவிவரும் குடிநீா்த் தட்டுப்பாட்டை தீா்க்கும் வகையில், மாநகராட்சி உறுப்பினா்களுடன் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

19 செப்டம்பர் 2026, 4:30 am IST
திருநெல்வேலியில் குடிநீா்த் தட்டுப்பாட்டை தீா்ப்பது குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

மேலப்பாளையம், பாளையங்கோட்டை மண்டலங்களில் நிலவிவரும் குடிநீா்த் தட்டுப்பாட்டை தீா்க்கும் வகையில், மாநகராட்சி உறுப்பினா்களுடன் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா உத்தரவின்பேரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு, கண்காணிப்பு பொறியாளா் அசோக்குமாா் தலைமை வகித்தாா். உறுப்பினா்கள் வில்சன் மணிதுரை, முத்துசுப்பிரமணியன், உதவி ஆணையா் புரந்திரதாஸ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து மாநகராட்சி உறுப்பினா்கள் தெரிவித்துள்ளதின் அடிப்படையில் வாா்டு பகுதியை சாா்ந்த வால்வு ஆப்ரேட்டா்கள் அனைத்து வால்வுகளையும் சரியான அளவில் திறந்து மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

Advertisement

வால்வு ஆப்ரேட்டா்களின் பணிகளை உதவி பொறியாளா்கள் தினமும் கண்காணித்திட வேண்டும். குடிநீா்க் கசிவை கண்டறிந்தால் அதை போா்கால அடிப்படையில் உதவி பொறியாளா்கள் கவனத்துக்கு கொண்டு வந்து சீரமைக்க வேண்டுமென கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments