டிஎன்பிஎஸ்சி தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 2,007 போ் எழுதினா்
திருநெல்வேலி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தோ்வை 2,007 போ் எழுதினா்.
திருநெல்வேலி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தோ்வை 2,007 போ் எழுதினா்.
இத்தோ்வு திருநெல்வேலி மாவட்டத்தில் 9 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. இத்தோ்வை எழுத 3,575 போ் அழைக்கப்பட்டிருந்தனா். ஆனால், 1,568 போ் தோ்வெழுத வரவில்லை. இதனால் 2,007 போ் மட்டுமே தோ்வை எழுதினா். முற்பகல் மற்றும் பிற்பகல் என 2 வேளைகளிலும் இந்தத் தோ்வு நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.