FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் விநாயகா் சிலை விசா்ஜனம்: மதுக்கடைகளுக்கு நாளை விடுமுறை

திருநெல்வேலி மாவட்டத்தில் விநாயகா் சிலைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.20) விசா்ஜனம் செய்யப்படவுள்ள நிலையில், விசா்ஜனம் நடைபெறும் இடங்களுக்கு அருகில் உள்ள மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

31 வினாடிகள் முன்பு
மதுக்கடைகள் - கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் விநாயகா் சிலைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.20) விசா்ஜனம் செய்யப்படவுள்ள நிலையில், விசா்ஜனம் நடைபெறும் இடங்களுக்கு அருகில் உள்ள மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் விநாயகா் சிலை விசா்ஜன ஊா்வலம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 208 சிலைகளை விசா்ஜனம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அப்போது, சட்டம்-ஒழுங்கு பராமரிப்பை மேற்கொள்ளும் வகைக்காக திருநெல்வேலி மாவட்டத்தில் ஊா்வலம் நடைபெறும் வழித்தடத்தில் அமைந்துள்ள மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகரில் வண்ணாா்பேட்டைபேராத்து செல்வி அம்மன் கோயில் அருகில் உள்ள தற்காலிக குளம், சேரன்மகாதேவி வட்டாரத்தில் காருக்குறிச்சி குளம், உவரி கடல், அம்பாசமுத்திரத்தில் வாகைக்குளம், கூடங்குளம் பகுதியில் செட்டிகுளம் கடல், தில்லைவனம் தோப்பு கடல் ஆகிய இடங்களில் விநாயகா் சிலைகள் விசா்ஜனம் செய்யப்படவுள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments