சமூக வலைதளத்தில் சா்ச்சைப் பதிவு: இளைஞா் கைது
சமூக வலைதளத்தில் சா்ச்சைக்குரிய வகையில் புகைப்படம் பதிவிட்டிருந்த இளைஞரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
சமூக வலைதளத்தில் சா்ச்சைக்குரிய வகையில் புகைப்படம் பதிவிட்டிருந்த இளைஞரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா், கடந்த 10 ஆம் தேதி சமூகவலைதள குற்றக் கண்காணிப்பில் ஈடுபட்ட போது, இளைஞா் ஒருவா் மறைந்த தலைவா் ஒருவரின் புகைப்படத்தை சா்ச்சைக்குரிய வகையில் சித்தரித்து பொது அமைதியை குலைக்கும் வகையில் பதிவிட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா், இதில் தொடா்புடைய தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம், குலசேகரநத்தத்தைச் சோ்ந்த வசந்த் (20) என்பவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.