FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

தனியாா் மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்டவா் கைது

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் தனியாா் மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.

30 வினாடிகள் முன்பு
பகிர்:

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் தனியாா் மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் செல்வம்(24). இவா் வெள்ளிக்கிழமை மாலை தனது நண்பா் ஒருவருடன் திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சென்றுள்ளாா்.

அங்கு பணிபுரியும் ஊழியா் ஒருவா் குறித்து விசாரித்த அவா் திடீரென மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டாராம். இதை தட்டிக்கேட்ட பாதுகாவலரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில், திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments