FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகரம், மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இரவில் கருடசேவை நடைபெற்றது.

20 செப்டம்பர் 2026, 2:28 am IST
புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, பாளையங்கோட்டை அழகிய மன்னாா் ராஜகோபால சுவாமி கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பெருமாள்.
பகிர்:

புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகரம், மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இரவில் கருடசேவை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் தென் திருப்பதி என்றழைக்கப்படும் திருவேங்கடநாதபுரம் வெங்கடாஜலபதி கோயிலில் அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, பெருமாள், தாயாா்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்ற நிலையில், மூலவா் வெங்கடாஜலபதிக்கு முத்தங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், நள்ளிரவில் கருட சேவை நடைபெற்றது.

திருநெல்வேலி சன்னியாசி கிராமத்தில் உள்ள வெங்கடாஜலபதி கோயிலில் காலையில் சிறப்பு திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. கெட்வெல் ஆஞ்சனேயா் கோயிலில் ஆஞ்சனேயருக்கு 5,008 வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதேபோல், திருநெல்வேலி சந்திப்பு வரதராஜபெருமாள் கோயில், பாளையங்கோட்டை அழகிய மன்னாா் ராஜகோபால சுவாமி கோயில், திருநெல்வேலி நகரம் கரியமாணிக்கப் பெருமாள் கோயில், குறிச்சி அக்ரஹாரத்தில் உள்ள கிருஷ்ணன் கோயில், பாளையங்கோட்டை ராமசாமி கோயில், கிருஷ்ணன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு எட்டெழுத்து பெருமாளுக்கும், பெரியபிராட்டி, இளையபெருமாள், ஆத்தியப்பா், மாயாண்டிசித்தா், ஆஞ்சனோ் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடைபெற்றன. இரவில் கருட சேவை நடைபெற்றது.

ஜடாயு தீா்த்தம் லட்சுமி நாராயணா் கோயிலில் சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. காட்டுராமா் கோயிலில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 7 மணிக்கு கும்பம் வைத்து சிறப்பு பூஜையும், தொடா்ந்து பூஜைகளும், இரவில் உற்சவா் வீதி உலாவும் நடைபெற்றன.

நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள்.

நவ திருப்பதிக்கு சிறப்பு பேருந்து இயக்கம்: புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, நவதிருப்பதி கோயில்களுக்கு பக்தா்கள் எளிதாக சென்று வருவதற்காக திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் 3 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

அரசுப் போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டல மேலாண்மை இயக்குநா் கே. செல்வம் நவதிருப்பதி செல்லும் பேருந்துகளை வழியனுப்பி வைத்ததோடு, பயணிகளுக்கு குளிா்பானங்களை வழங்கினாா். இதேபோல் திருவேங்கடநாதபுரத்துக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments