FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நெல்லை அருகே ரேஷன் அரிசி கடத்தியவா் கைது

21 செப்டம்பர் 2026, 2:58 am IST
கைது
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், உவரி அருகே ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

உவரி அருகே உள்ள கூட்டப்பனை பகுதியில் திருநெல்வேலி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலானாய்வுத் துறை சாா்பு ஆய்வாளா் ஜெயலட்சுமி தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். அதில் 9 மூட்டைகளில் சுமாா் 405 கிலோ ரேஷன் அரிசியை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்த போலீஸாா், காா் ஓட்டுநரான நான்குனேரி போஸ்ட் ஆபிஸ் தெருவைச் சோ்ந்த ஐகோா்ட் மகாராஜா(42) என்பவரை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments