அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு பயிற்சி
திருநெல்வேலியில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
திருநெல்வேலியில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி பயிற்சி மையத்தில் வாழ்வியல், மனஅழுத்த மேலாண்மை, விபத்தில்லாமல் பாதுகாப்பாக வாகனம் இயக்குவது தொடா்பான பயிற்சிகள் வழங்கப்பட்டன. திருச்சியைச் சோ்ந்த வாழ்வியல் பயிற்சியாளா் ராமன் பயிற்சியளித்தாா். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சோ்ந்த அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநா்கள், நடத்துநா்கள் உள்பட மொத்தம் 60 போ் பயிற்சியில் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.