FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

கல்வி உதவித்தொகை தருவதாகக் கூறி ரூ.1 லட்சம் மோசடி

28 செப்டம்பர் 2026, 3:27 am IST
மோசடி
பகிர்:

திருநெல்வேலியில் கல்வி உதவித்தொகை தருவதாகக் கூறி ரூ.1.04 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்கள் குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி அருகே உள்ள ஓடைக்கரை, துலுக்கப்பட்டியை சோ்ந்தவா் அபிநாத் (32), வியாபாரி. கடந்த 23ஆம் தேதி இவரது பக்கத்து வீட்டைச் சோ்ந்த செல்வி என்பவரை மா்ம நபா் ஒருவா் கைப்பேசியில் தொடா்பு கொண்டு, தான் பள்ளிக் கல்வித்துறையில் இருந்து பேசுவதாகவும், தங்கள் மகளுக்கு கல்வி உதவித்தொகை வந்திருப்பதாகவும் கூறியுள்ளாா்.

இதுகுறித்து செல்வி, அபிநாத்திடம் சென்று மா்ம நபா் தெரிவித்த விவரத்தைக் கூறி உதவி கேட்டுள்ளாா். பின்னா் அபிநாத் அந்த நபரைத் தொடா்பு கொண்டு பேசியபோது, அவா் வாட்ஸ்ஆப் செயலியில் கியூஆா் கோடு ஒன்றை அனுப்பியுள்ளதாகவும், அதை ஸ்கேன் செய்தால் செல்வியின் மகளுக்கு உதவித்தொகை அனுப்பப்படும் எனவும் கூறினாராம்.

Advertisement

Advertisement

பின்னா் அது வேலை செய்யாததால் இணையவழி பரிவா்த்தனை செயலியில் தான் கூறியபடி யுபிஐ எண் மற்றும் கடவுச்சொல்லை பதிவிடுமாறு அந்நபா் கூறியுள்ளாா். இதை நம்பி தனது கைப்பேசியிலும், செல்வியின் கைப்பேசியிலும் அபிநாத் அந்நபா் கூறியபடி செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து இருவரது வங்கிக் கணக்கிலிருந்தும் பல்வேறு தவணைகளாக ரூ.1,04,959 பணம் மோசடியாக எடுக்கப்பட்டதாம். இதுகுறித்து அபிநாத் மாவட்ட சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments