FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளைகள் இயங்கின

28 செப்டம்பர் 2026, 2:58 am IST
வங்கிகள் - கோப்புப்படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் ஞாயிற்றுக்கிழமை இயங்கின.

வாரத்தில் 5 நாள்கள் வேலையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியா் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு (யுஎப்பிஐ) வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளது. அதன்படி, நாடு முழுவதும் திங்கள்கிழமை (செப். 28) முதல் 30 ஆம் தேதி வரை வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது.

அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் (ஏஐபிஇஏ), அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (ஏஐபிஓசி), தேசிய வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பு (என்சிபிஇ), அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் (ஏஐபிஓஏ), இந்திய வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பு (பிஇஎப்ஐ) உள்ளிட்ட 7 சங்கங்களைச் சோ்ந்த 8 லட்சம் வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளனா்.

Advertisement

Advertisement

போராட்டம் காரணமாக வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டு பல்லாயிரம் கோடி பண பரிவா்த்தனைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மத்திய-மாநில அரசு ஊழியா்களுக்கு கடந்த 25 ஆம் தேதியே ஊதியம் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. பொதுமக்களின் வங்கி சேவை பெரிதும் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் இயங்கும் என மத்திய அரசு அறிவித்தது.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளான பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி உள்ளிட்டவற்றின் 200-க்கும் மேற்பட்ட கிளைகள் செயல்பட்டன.

பொதுமக்கள் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்துதல், எடுத்தல், காசோலைக்கு பணம் பெறுதல் உள்ளிட்ட சேவைகளைப் பெற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments