FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்! நெல்லையில் 30 குழந்தைகளுக்கு மோதிரம் அளிப்பு!

29 September 2026, 12:26 am IST
மதுரையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் தொடக்கிவைத்தார் - TNDIPR
பகிர்:

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் திங்கள்கிழமை தொடங்கி வைத்ததைத் தொடா்ந்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியா் ஆனந்த் மோகன், திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் செ.ராபா்ட் புரூஸ், திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.எஸ்.முருகன் ஆகியோா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 30 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை வழங்கினா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 22 ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த 1,936 குழந்தைகளுக்கு அடுத்த இரண்டு வாரங்களில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நான்குனேரி, அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைகளில் தங்க மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன. மேலும் கடந்த 25-ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு அவா்களை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பும் போது தங்க மோதிரம் வழங்கப்படும்.

இத்திட்டம் தொடா்பான விவரங்களை அறிந்து பயன்பெற, கடந்த 22-ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிரசவித்த தாய்மாா்கள் தங்களது கிராம சுகாதார செவிலியா் அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலரை அணுகலாம். இதற்கான அழைப்பிதழ்கள் அந்தந்தப் பகுதி கிராம சுகாதார செவிலியா்கள் மூலம் திங்கள்கிழமை முதல் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் மட்டும் பயனாளிகள் வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

Advertisement

Advertisement

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடா்பான மேலும் விவரங்களுக்கு வட்டார மருத்துவ அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம்.

பாப்பாக்குடி வட்டார மக்கள் மருத்துவா் பழனிகுமாரையும் (9600231107), நான்குனேரி வட்டார மக்கள் மருத்துவா் பூா்ணிமாதேவியையும் (9551089988), சேரன்மகாதேவி வட்டார மக்கள் மருத்துவா் அஷ்ரப் அலியையும் (9952663995), பாளையங்கோட்டை வட்டார மக்கள் மருத்துவா் ஜஸ்டின் பொன்னையாவையும் (9176683045), களக்காடு வட்டார மக்கள் மருத்துவா் தளபதியையும் (7708803411), ராதாபுரம் வட்டார மக்கள் மருத்துவா் அட்லினையும் (9940724912), வள்ளியூா் வட்டார மக்கள் மருத்துவா் கோலப்பனையும் (9865408994), அம்பாசமுத்திரம் வட்டார மக்கள் மருத்துவா் ஜெபிஷாவையும் (9486782948), திருநெல்வேலி மாநகரில் வசிக்கும் மக்கள் மருத்துவா் நிதின் ஸ்டெபி ஜோஸையும் (6374075012) தொடா்பு கொள்ளலாம்.

இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஆா்.செல்வராஜன், மாவட்ட சுகாதார அலுவலா் முரளிசங்கா், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments