FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

குமரியில் திருப்பதி கோயில் அமைக்கும் பணி தீவிரம்

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் திருப்பதி வெங்கடாசலபதி கோயில் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் திருப்பதி வெங்கடாசலபதி கோயில் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் 2010-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி ஸ்ரீநிவாச கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டனர். இதைத் தொடர்ந்து, திருக்கல்யாணம் நடைபெற்ற பகுதியில் திருப்பதியில் இருப்பதைப் போன்று கோயில் அமைக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது.

 இதற்காக கேந்திர நிர்வாகத்தை அணுகிய போது 5 ஏக்கர் நிலம் தானமாக தருவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திருக்கல்யாணம் நடைபெற்ற இடத்தின் அருகாமையில் கோயில் அமைப்பதற்காக கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், உள்ளூர் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் பூமிபூஜை நடத்தப்பட்டது. சில மாத இடைவெளியில் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கியது.

Advertisement

Advertisement

 இங்கு திருப்பதியில் இருப்பதைப் போன்று வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, பத்மாவதி தாயார், கருட பகவான் சன்னதிகள் மற்றும் தங்கக் கொடிமரம், தங்கக் கோபுரம், தெப்பக்குளம், கல்யாண மண்டபம், முடி காணிக்கை செலுத்தும் இடம், சமையல் அறை உள்ளிட்ட அனைத்தும் இங்கு இடம் பெறும். மேலும், திருப்பதியில் நடப்பதைப் போன்று நாள்தோறும் பூஜைகள், வழிபாடுகள், திருவிழாக்கள் நடத்தப்படும் எனவும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

 தற்போதைய நிலவரப்படி கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. கோயிலுக்கான சிலைகள், தூண்கள் ஆகியவை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கோயிலுக்கான கட்டுமானப் பணிகளும் நிறைவடையும் பட்சத்தில் கோபுரம், மற்றும் சிலைகள் நிறுவும் பணி தொடங்கும் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments