FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

குமரியில் வரி ஏய்ப்பு: கேரள வாகனங்கள் பறிமுதல்

தமிழகத்தில் இயக்குவதற்கான வரியை செலுத்தாமலும், உரிய அனுமதிச்சீட்டு பெறாமலும் இயக்கப்பட்ட 2 கேரள

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

தமிழகத்தில் இயக்குவதற்கான வரியை செலுத்தாமலும், உரிய அனுமதிச்சீட்டு பெறாமலும் இயக்கப்பட்ட 2 கேரள ஆம்னி பேருந்துகளை மார்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
குமரி மாவட்டம், குளச்சல், குறும்பனை, ஆலஞ்சி, தேங்காய்ப்பட்டினம், புதுக்கடை பகுதி வழியாக கேரள பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் பயணிகளை கேரளத்துக்கு ஏற்றிச் செல்வதாக, குளச்சல் வேன் ஓட்டுநர் சங்கம் சார்பிலும், உள்ளூர் மக்கள் சார்பிலும் மார்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புகார்கள் அளிக்கப்பட்டனவாம்.
இதையடுத்து, மார்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கே. பழனிச்சாமி தலைமையில் அதிகாரிகள் குளச்சல் - புதுக்கடை பாதையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பயணிகளை ஏற்றிவந்த கேரள பதிவெண் கொண்ட 2 ஆம்னி பேருந்துகளை நிறுத்தி ஆவணங்களை சோதனை செய்தனர்.
அதில், அப்பேருந்துகள் தமிழக பகுதியில் இயக்குவதற்கான வரி செலுத்தாமலும், உரிய அனுமதிச்சீட்டு பெறாமலும் இயங்கியது தெரியவந்தது. இதையடுத்து, 2 ஆம்னி பேருந்துகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து மார்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குக் கொண்டுசென்றனர்.  தொடர்ந்து,  நட்டாலம் பகுதியில் மேற்கொண்ட வாகனத் தணிக்கையில், அனுமதிச்சீட்டுக்கு புறம்பாக தடம்மாறி இயங்கிய சிற்றுந்தும் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட கேரள ஆம்னி பேருந்துகளுக்கு வரி மற்றும் அபராதமாக ரூ. 60 ஆயிரம் விதிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட  சிற்றுந்தின் ஆவணங்கள் மேல்நடவடிக்கைக்காக மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், வாகனச் சோதனை தொடரும் எனவும் வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments