FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சொத்து வரி உயர்வைக் கண்டித்து நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் தர்னா

சொத்து வரி உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், நாகர்கோவில்  கேசவன்புதூர் சந்திப்பில் தர்னா போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

சொத்து வரி உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், நாகர்கோவில்  கேசவன்புதூர் சந்திப்பில் தர்னா போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வீட்டு வரி,  சொத்துவரியை  தமிழக அரசு அண்மையில் உயர்த்தியது. இதைக் கண்டித்து நடைபெற்ற தர்னா போராட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கிளைச் செயலர் எஸ்.மனோகரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.உஷா பாசி தொடக்க உரையாற்றினார். வட்டாரச் செயலர் எஸ்.மிக்கேல், மாவட்டக்குழு உறுப்பினர் மலைவிளை பாசி ஆகியோர் விளக்கிப் பேசினர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.முருகேசன் நிறைவுரையாற்றினார். வட்டாரக்குழு உறுப்பினர் எஸ்.மணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments