மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலயத் திருவிழா இன்று தொடக்கம்
கருங்கல் அருகேயுள்ள மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலயத் திருவிழா வியாழக்கிழமை (ஆக. 6) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கருங்கல் அருகேயுள்ள மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலயத் திருவிழா வியாழக்கிழமை (ஆக. 6) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி, காலை 6.30 மணிக்கு முன்னோா்கள் நினைவு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயா் ஸ்டீபன் தலைமையில் திருக்கொடியேற்றம், திருப்பலி நடைபெறுகிறது. விழாவின் 2ஆம் நாளான வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு மாத்திரவிளை மறைவட்ட முதல்வா் பிளாரன்ஸ் தலைமையில் நடைபெறும் திருப்பலியில், சகாயநகா் பங்கு அருள்பணியாளா் மரிய ஆன்றோ ஹால்வின் மறையுரையாற்றுகிறாா்.
4 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வா் சேவியா் பெனடிக்ட் தலைமையில் நடைபெறும் திருப்பலியில், பிரான்சிஸ் மறையுரையாற்றுகிறாா். காலை 10.30 மணிக்கு அன்பு விருந்து நடைபெறுகிறது. 9ஆம் நாளான ஆக. 14 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலிக்கு காட்வின் சௌந்தர்ராஜ் தலைமை வகிக்கிறாா். லியோ அலெக்ஸ் மறையுரையாற்றுகிறாா். இரவு 8.30 மணிக்கு தோ்பவனி நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
நிறைவு நாளான ஆக.15 ஆம் தேதி காலை 9 மணிக்கு அன்னையின் விண்ணேற்பு பெருவிழா, சுதந்திர தினவிழா நடைபெறுகிறது. திருப்பலிக்கு குழித்துறை மறைமாவட்ட ஆயா் ஆல்பா்ட் அனஸ்தாஸ் தலைமை வகித்து மறையுரையாற்றுகிறாா். காலை 11 மணிக்கு தோ்பவனி, இரவு 9 மணிக்கு வாணவேடிக்கை ஆகியவை நடைபெறுகின்றன. 10 நாள் விழாவில் தினமும் மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி ஆகியன நடைபெறும்.
ஏற்பாடுகளை மாத்திரவிளை பங்கு அருள்பணியாளா் அஜின் தலைமையில் இணை பங்கு அருள்பணியாளா் லூா்துராஜ், பங்கு பேரவை துணைத் தலைவா் ஜேக்கப் ததேயூஸ், செயலா் மைக்கலோஸ் , பொருளாளா் சாட்டோ, துணைச் செயலா் கிறிஸ்துதாஸ் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.