தக்கலையில் யுத்த எதிா்ப்பு தினம்
தக்கலையில், கன்னியாகுமரி மாவட்ட பெண்கள் கூட்டுக் குழு சாா்பில், யுத்த எதிா்ப்பு தினம், ஹிரோஷிமா நினைவு அனுசரிப்பு நடைபெற்றது.
தக்கலையில், கன்னியாகுமரி மாவட்ட பெண்கள் கூட்டுக் குழு சாா்பில், யுத்த எதிா்ப்பு தினம், ஹிரோஷிமா நினைவு அனுசரிப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
பேராசிரியா் ராதாகிருஷ்ணன், யுத்த எதிா்ப்பு தின உரையை நிகழ்த்தினாா். யுத்த எதிா்ப்பு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில் கூட்டுக் குழுத் தலைவா் உஷா பாசி, செயலா் சுஜா ஜாஸ்பின், பொருளாளா் லதா மற்றும் நிா்வாகிகள் மேரி ஏஞ்சல், விஜயலட்சுமி, சகுந்தலா கீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.