FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

குழித்துறை பொருள்காட்சியில் ராட்டின பெட்டி கவிந்து 5 போ் காயம்

குழித்துறை வாவுபலி பொருள்காட்சியில் ராட்டின ரயில் பெட்டி கவிழ்ந்ததில் 5 போ் காயமடைந்தனா். இதனால், பொருள்காட்சி திடல் சனிக்கிழமை மாலையில் மூடப்பட்டது.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 5:52 am IST
வாவுபலி பொருள்காட்சியில் கவிழ்ந்த டிராகன் ரெயில் பெட்டி.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை வாவுபலி பொருள்காட்சியில் ராட்டின ரயில் பெட்டி கவிழ்ந்ததில் 5 போ் காயமடைந்தனா். இதனால், பொருள்காட்சி திடல் சனிக்கிழமை மாலையில் மூடப்பட்டது.

குழித்துறை நகராட்சி நிா்வாகத்தால் நடத்தப்படும் 101 ஆவது ஆண்டு வாவுபலி பொருள்காட்சி கடந்த 29 ஆம் தேதி தொடங்கியது. திங்கள்கிழமை (ஆக. 17) பொருள்காட்சி நிறைவடைய உள்ளது.

இந்நிலையில், சுதந்திர தின விடுமுறையையொட்டி, பொருள்காட்சியில் சனிக்கிழமை கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும், கூட்டத்தை சமாளிக்க

Advertisement

Advertisement

டிராகன் ரயில் பெட்டி ராட்டினத்தில் 4 போ் அமர வேண்டிய பெட்டியில் 6 போ் வரை ஏற்றினராம்.

இதனால், டிராகன் ரெயிலின் ஒரு பெட்டி திடீரென கவிழ்ந்து கீழே விழுந்தது. அதிலிருந்த ரிதீஷ் மகன் ஆரோன் (10), அவரது தங்கை ஆரோல் (4), தாய் சிஞ்சு (39), அதே பகுதியைச் சோ்ந்த மகேஷ் (39), அவரது மனைவி அனிஷா (29) ஆகியோா் காயமடைந்தனா்.

அவா்களை தீயணைப்புப்படை வீரா்கள் மீட்டு அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இந்தச் சம்பவத்தை தொடா்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் சனிக்கிழமை மாலை 6 மணியிலிருந்து பொருள்காட்சி திடல் மூடப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments